திராவிட கட்டிடக்கலை
இந்தியக் கட்டிடக்கலை வரலாற்றில் திராவிடக் கட்டிடக்கலை முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் ஆறாம் நூற்றாண்டளவில் தற்போதைய கர்நாடகப் பகுதிகளில் சாளுக்கிய ஆட்சியின் கீழ், அக்கால இந்தியக் கட்டிடக்கலைப் பாணியிலிருந்து விலகி, புதிய திராவிடக் கட்டிடக்கலைப் பாணி முகம் காட்டத் தொடங்கியது. எனினும், இப் பாணியின் மூலக்கருவை குப்தர்காலப் பௌத்த கட்டிடங்கள் சிலவற்றில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்தப் பாணியை ஏழாம் நூற்றாண்டளவில் ஆந்திரப் பிரதேசப் பகுதிகளிலும் காணக்கூடியதாக இருந்தது. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே பல்லவ அரசர்களின் கீழும் பின்னர் சோழர், பாண்டியர், விஜயநகரம், நாயக்கர் ஆகிய ஆட்சிகளின் கீழும் தொடர்ந்து வளர்ந்து உயர்நிலை அடைந்தது.
திராவிடக் கட்டிடக்கலையைப் பல துணைப் பிரிவுகளாகப் பிரித்து ஆராய்வது வழக்கம். பொதுவாகக் கால அடிப்படையில், அந்தந்த காலங்களில் முதன்மை பெற்றிருந்த அரசுகளின் தொடர்பில் இத் துணைப் பிரிவுகளை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தியக் கட்டிடக்கலை (Indian Archtecture) என்னும் ஆங்கில நூலில் பேர்சி பிறவுன் என்பார் பின்வருமாறு திராவிடக் கட்டிடக்கலையைத் துணைப்பிரிவுகளாக வகுத்துள்ளார்.
பல்லவர் காலம்[தொகு]
- தனிக்கட்டுரை: பல்லவர் காலக் கட்டிடக்கலை
கல்லினால் கட்டிடங்களை அமைக்கும் முறையைத் தென்னகத்தில் அறிமுகப்படுத்தியது பல்லவர்களே. ஆரம்பத்தில் பாறைகளைக் குடைந்து குடைவரை கோயில்களை அமைத்தனர். அத்துடன் பாறைகளை வெளிப்புறத்தில் செதுக்கி ஒற்றைக்கல் கோயில்களையும் அமைத்தனர். பின்னர் கற்களைப் பயன்படுத்திக் கட்டுமானக் கோயில்கள் அமைக்கப்பட்டன. திருச்சிராப்பள்ளி, திருக்கழுங்குன்றம், தளவானூர், பல்லாவரம், நாமக்கல் ஆகியவை உட்படப் பல இடங்களில் பல்லவர்களின் குடைவரை கோயில்களைக் காணலாம். மாமல்லபுரத்திலுள்ள புகழ் பெற்ற "பஞ்ச பாண்டவர் ரதங்கள்" என அழைக்கப்படும் கோயில்கள் ஒற்றைக் கல்லில் செதுக்கி எடுக்கப்பட்டவை ஆகும். காஞ்சிபுரத்திலுள்ள வைகுந்தப்பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் என்பனவும் புகழ் பெற்ற மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலும் பல்லவர்களின் கட்டுமானக் கோயில்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
சோழர் காலம்[தொகு]
- தனிக்கட்டுரை: சோழர் காலக் கட்டிடக்கலை
தமிழகத்தில் சோழராட்சி முன்னணிக்கு வந்த முற்பகுதியில் (10 ஆம் நூற்றாண்டு) மிகுதியான அளவில் கோயில்கள் கட்டப்படதாகத் தெரியவில்லை; கட்டப்பட்டவையும் அளவிற் சிறியவையே. இக் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களுக்கு எடுத்துக்காட்டாகத் திருக்கட்டளையிலுள்ள சுந்தரேஸ்வரர் கோயில், கொடும்பாளூரிலுள்ள மூவர் கோயில், திருமயம், கண்ணனூரிலுள்ள பாலசுப்பிரமணியர் கோயில், திருச்சிராப்பள்ளி, சிறீனிவாசநல்லூரில் கட்டப்பட்ட குரங்கநாதர் கோயில் என்பவற்றைக் கூறலாம்.
சோழராட்சியின் தொடக்கக்காலக் கோயில்களில் பல கூறுகளில் புதிய பாணிகள் தென்பட்டபோதும், பல்லவர் காலக் கட்டிடக்கலை கூறுகளும் முற்றாக மறைந்து விடவில்லை. இக்காலக் கட்டிடங்கள் முன்னர் கூறியது போல் அளவிற் சிறியனவாக இருந்தாலும், பல்லவர் கட்டிடங்களோடு ஒப்பிடுகையில் முழுமை பெற்றவையாகக் காணப்படுகின்றன.
சோழராட்சியின் பிற்பகுதி திராவிடக் கட்டிடக்கலையின் பொற்காலம் எனலாம். இராஜராஜ சோழன் காலத்தில் சோழர்கள் மிகவும் பலம் பெற்று விளங்கினர். அவர்களுடைய நாடு பரந்து விரிந்து இருந்தது. இந்திய நாட்டுக்கு வெளியேயும் அவர்களுடைய ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலம். இந்த அதிகார பலத்தினதும், செல்வ வளத்தினதும் பின்னணியிலேயே தஞ்சைப் பெரிய கோயில் என அழைக்கப்படும் பிருஹதீஸ்வரர் கோயில் கட்டப்பட்டது.
பாண்டியர் காலக் கட்டிடக்கலை
12 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் 14 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை தமிழ் நாட்டில் பலம் பெற்றிருந்த பிற்காலப் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் வளர்ந்த கட்டிடக்கலைப் பாணி பாண்டியர் காலக் கட்டிடக்கலை என்று குறிப்பிடப்படுகிறது.
சோழர் காலத்தைப் போல பாண்டியர் காலம் கட்டிடக்கலைத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்ததாகச் சொல்ல முடியாது. எனினும் திராவிடக் கட்டிடக்கலையில் ஏற்பட்ட சில புதிய மாற்றங்களுக்கான அடிப்படைகளை இக்காலக் கட்டிடங்களிற் காண முடியும். பாண்டியர் காலத்துக்கு முற்பட்ட வட இந்தியக் கோயில்களிலும், தென்னிந்தியாவில் பல்லவர், சோழர் காலக் கோயில்களிலும் சிற்பிகளின் அடிப்படைக் கவனம் கோயிலின் கருவறைக்கு மேல் அமைந்த விமானம் அல்லது சிகரம் என்று அழைக்கப்பட்ட அமைப்பின் மீதே இருந்தது. இதுவே கோயில்களின் மிக உயரமான அமைப்பாகவும் இருந்தது. சோழர் காலத்தில் தஞ்சாவூர் பிருஹதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் முதலியவை மிகப்பெரிய விமானங்களை உடையவையாக அமைக்கப்பட்டன. பாண்டியர் காலத்தில் இம் முறையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. சிகரம் அதன் கட்டிடக்கலை முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கியது. பழைய கோவில்களைச் சுற்றிப் புதிய வளர்ச்சிகள் ஏற்படத் தொடங்கின. கோயில்களைச் சுற்றி உயர்ந்த சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுக் கோபுரங்களுடன் கூடிய நுழைவாயில்களும் அமைக்கப்பட்டன. படிப்படியாக இக் கோபுரங்கள் கோயில்களின் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புக்களாக ஆயின.
விஜயநகரக் கட்டிடக்கலை
விஜயநகரக் கட்டிடக்கலை என்பது, கிபி 1336 - 1565 காலப்பகுதியில், தென்னிந்தியாவின் பெரும்பகுதியில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நிலவிய காலத்தில் வழங்கிய கட்டிடக்கலைப் பாணியைக் குறிக்கும். இன்றைய இந்திய மாநிலமான கர்நாடகத்தில் உள்ள துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்திருந்த விஜயநகரம் இப்பேரரசின் தலைநகரமாக இருந்தது. இதனால் இக் காலத்தில் கட்டப்பட்ட ஏராளமான கோயில்கள், மாளிகைகள் மற்றும் பல கட்டிடங்கள் இப் பகுதியிலேயே செறிந்து காணப்படுகின்றன. இவற்றுள் விஜயநகரத்தினுள் அடங்கும் ஹம்பி பகுதியில் இருக்கும் கட்டிடச் சின்னங்களின் தொகுதி யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இக் காலத்தில் பல புதிய கோயில்கள் கட்டப்பட்டன, அத்துடன், தென்னிந்தியா முழுவதும் ஏற்கனவே இருந்த பல நூற்றுக்கணக்கான கோயில்களில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டதுடன், திருத்தவேலைகளும் செய்யப்பட்டன. பழைய தலைநகரப் பகுதியில் விஜயநகரக் காலத்தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான கட்டிடச் சின்னங்கள் இன்றும் காணப்படுகின்றன. இவற்றுள் 56 சின்னங்கள் யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படுகின்றன. அறுநூற்று ஐம்பது சின்னங்கள் கர்நாடக அரசினால் பாதுகாக்கப்படுகின்றன.
இன்னும் 350 வரையிலான சின்னங்கள் பாதுகாக்கப்படவேண்டி உள்ளன.

சிறப்பு இயல்புகள்[தொகு]
விஜயநகரக் கட்டிடக்கலையைச் சமயம் சார்ந்தவை, அரசு சார்ந்தவை, குடிசார்ந்தவை என மூன்றாகப் பிரித்துப் பார்க்க முடியும். விஜயநகரக் கட்டிடக்கலைப் பாணி இதற்கு முன், இப்பகுதிகளில் நிலவிய சாளுக்கிய, ஹோய்சல, பாண்டிய, சோழர் கட்டிடக்கலைகளின் இயல்புகள் பலவற்றைத் தன்னுள் அடக்கியது.
விஜயநகரப் பேரரசும், ஹோய்சாலப் பேரரசும் ஆட்சி புரிந்த சுமார் 400 ஆண்டுகளாக இளகல் தீப்பாறை (chloritic schist) அல்லது மாவுக் கற்களே (soapstone) கோயில் கட்டிட வேலைகளில் விரும்பப்பட்டன. மாவுக்கல் செதுக்குவதற்கு இலகுவானது என்பதால் சிற்பவேலைகளுக்கும் இது பெரிதும் பயன்பட்டது. விஜயநகரக் காலத்தில், பாதமி சாளுக்கியப் பாணிக் கட்டிடங்களுக்கு உள்ளூர்க் கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. சில சிற்பங்களிலும், புடைப்புச் சிற்பங்களிலும் மாவுக்கற்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதையும் காணலாம். கருங்கற் பயன்பாடு சிற்பவேலையின் செறிவைக் குறைத்துவிட்டாலும், கருங்கல் நீண்டகாலம் நிலைக்கக் கூடியது என்பதால் கோயில் கட்டிடங்களுக்கு விரும்பப்பட்டது. இங்கே பயன்பட்ட கருங்கற்கள் செதில்களாக உடையக்கூடியனவாக இருந்ததால், முன்னைய காலத்தைப் போல் உயர் தரம் வாய்ந்த சிற்பங்கள் மிகச் சிலவற்றையே உருவாக்க முடிந்தது. சிற்பங்களில் பயன்பட்ட கற்களில் காணப்பட்ட சீரற்ற மேற்பரப்பை மறைப்பதற்காக, சிற்பிகள் சாந்துப் பூச்சுக்களைப் பூசி மேற்பரப்பை வழுவழுப்பு ஆக்கியதுடன், நிறங்களும் பூசி அழகுபடுத்தினர்.
கோயில் அமைப்பு[தொகு]
விஜயநகரக் கோயில்கள் பெரும்பாலும் உறுதியான சுற்று மதில்களால் சூழப்பட்டவை. சிறிய கோயில்கள் ஒரு கருவறையையும் அதன் முன் அர்த்த மண்டபம் எனப்படும் சிறிய மண்டபம் ஒன்றையும் மட்டும் கொண்டவை. நடுத்தர அளவிலான கோயில்களில், கருவறையயும், அர்த்த மண்டபத்தையும் இணைக்கும் சிறிய இடைநாழி எனும் ஒரு சிறிய இடம் அமைந்திருக்கும். அத்துடன் அர்த்த மண்டபத்துக்கு அப்பால் முக மண்டபம் என்னும் இன்னொரு மண்டபமும் இருக்கும். பெரிய கோயில்களில் சுற்று மதில்களில் வாயில்கள் இருக்கும் இடங்களில் பெரிய கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விஜயநகரப் பேரரசர்களான ராயர்களின் பெயரைத் தழுவி இக் கோபுரங்கள் ராய கோபுரங்கள் என அழைக்கப்பட்டன. இவை, மரம், செங்கல், சாந்து ஆகியவற்றைக் கொண்டு, பெரும்பாலும் சோழர் பாணியில் அமைக்கப்பட்டன. கோபுரங்களில், மக்கள், கடவுளர் ஆகியோரின் பெரிய அளவுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டு அழகூட்டப்பட்டன. தமிழர் கட்டிடக்கலைச் செல்வாக்கினால் உருவான இவ்வழக்கம், பேரரசன் கிருஷ்ணதேவ ராயரின் காலத்தில் பிரபலமாகிப் பின்வந்த 200 ஆண்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருந்து வந்தது. பேலூரில் உள்ள சென்னகேசவர் கோயில் கோபுரம், ஸ்ரீரங்கம், ஸ்ரீசைலம் ஆகிய இடங்களில் உள்ள கோயில் கோபுரங்கள் ஆகியவை ராய கோபுரங்களுக்கு நல்ல எடுத்துக் காட்டுகள் ஆகும்.
இவை தவிர, மதில்களுக்குள் கருவறையைச் சுற்றிய கூரையிடப்பட்ட திருச்சுற்று, மகாமண்டபம் எனப்படும் தூண்களோடு கூடிய பெரிய மண்டபம், கல்யாண மண்டபம், திருக்குளம் என்பனவும் இக் காலக் கோயில்களின் கூறுகள் ஆயின. இக் காலத் தூண்களின் ஒரு புறத்தில், அவற்றோடு ஒட்டியபடி நிமிர்ந்த நிலையில் யாளிகள், முதுகில் வீரர்கள் இருக்க, இரண்டு கால்களில் பாய்ந்தபடி நிமிர்ந்து நிற்கும் குதிரைகள் ஆகியவற்றின் சிற்பங்கள் காணப்படுகின்றன. தூணின் மறு பக்கங்களில் இந்துப் பழங்கதைகளை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். யாளிகள், குதிரைகள் போன்றவை இல்லாத தூண்கள் சதுர வடிவாக அமைந்து அவற்றில் பழங்கதைகளை அடிப்படையாகக் கொண்ட அழகூட்டல்கள் காணப்படும்.
திராவிடக் கட்டிடக்கலை ஒழுங்கு
திராவிடக் கட்டிடக்கலை ஒழுங்கு என்னும்போது திராவிடக் கட்டிடக்கலையில் காணப்படுகின்ற இவ்வாறான ஒழுங்கமைவைக் குறிக்கும். இக்கட்டிடக்கலை ஒழுங்கானது பண்டைக்கால இந்தியாவின் ஆகமங்கள் மற்றும் சிற்பநூல்களில் அடங்கியுள்ள கட்டிடக்கலை, சிற்பம் ஆகியவை தொடர்பான விதிகளுக்கு அமையவும், பிரதேச மற்றும் சமுதாய, அரசியல், பண்பாட்டு நிலைமைகளை ஒட்டியும் வளர்ந்து வந்ததாகும்.
திராவிடக் கட்டிடக்கலை பெரும்பாலும் சமயம் சார்ந்ததாகவே இருந்து வந்துள்ளது. இதனால் கோயில் கட்டிடங்களை ஆராய்வதன் மூலம் இக் கட்டிடக்கலை ஒழுங்கு பற்றி அறிந்து கொள்ள முடியும்.
அடிப்படை உறுப்புகள்[தொகு]
ஒற்றைக் கருவறையுடன் கூடிய எளிமையான கோயில் கட்டிடமொன்று திராவிடக் கட்டிடக்கலையின் அடிப்படையான உறுப்புக்களான (அங்கங்கள்) பின்வரும் அனைத்தையும் கொண்டிருக்கக்கூடும்.
- உபபீடம்
- தாங்குதளம் (அதிஷ்டானம்)
- பாதசுவர் அல்லது கால் (பித்தி)
- தளவரிசை (பிரஸ்தாரம்)
- கழுத்து (கட்டிடக்கலை) (கிரீவம்)
- சிகரம்
- முடி (கட்டிடக்கலை)(கலசம்)
மேலே தரப்பட்ட ஒவ்வொரு உறுப்பும் பல துணை உறுப்புக்களால் ஆனது. துணை உறுப்புக்கள் வெவ்வேறான எண்ணிக்கைகளிலும், விதங்களிலும் சேர்வதன் மூலம் பலவகையான அடிப்படை உறுப்புகள் உருவாகின்றன. புழக்கத்திலுள்ள பல்வேறு சிற்பநூல்களும் ஆகமங்களும் இவ்வாறான வேறுபாடுகள் குறித்து விளக்குகின்றன.
உபபீடம்[தொகு]
திராவிடக் கட்டிடங்களில் நிலத்துக்கு மேல் அமைகின்ற முதல் உறுப்பு இது. ஆரம்பகாலக் கட்டிடங்களில் உபபீடம் காணப்படவில்லை. கட்டிடங்களின் அளவு பெரிதாகி அவற்றின் சிக்கல் தன்மையும் அதிகரித்தபோது இந்த உறுப்புச் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மேல் அமைக்கப்படவுள்ள தாங்குதளத்துக்கு வலுவூட்டவும், கட்டிடத்தை உயர்த்திக் காட்டுவதற்குமாகவே உபபீடங்கள் அமைக்கப்படுகின்றன என்று சிற்பநூல்கள் கூறுகின்றன.
மயமதம், வேதி பத்ரம், பிரதி பத்ரம், சுப பத்ரம் என மூன்று வகையான உபபீடங்கள் பற்றியும், காசியப சிற்பசாஸ்திரம் என்னும் சிற்பநூல், பிரதி பத்ரம், பிரதி சுந்தரம், சௌபத்ரம், கல்யாணிகா என்னும் நான்கு வகையான உபபீடங்கள் பற்றியும் விளக்குகின்றன.
தாங்குதளம்[தொகு]
சிற்பநூல்களின்படி கட்டிடங்களின் அடித்தளம் இத் தாங்குதளங்களே. வடமொழியில் இதனை அதிஷ்டானம் என்பர். எதன்மீது கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றனவோ அதுவே அதிஷ்டானம் என மயமதம் கூறுகிறது. தாங்குதளங்கள், பாதபந்தம், பிரதிபந்தம், பத்மபந்தம் என மூன்று பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவை மேலும் பல துணைப்பிரிவுகளாக வகுக்கப்படுகின்றன. மயமதம் 14 வகையான தாங்குதளங்கள் பற்றியும், காசியப சிற்பசாஸ்திரம் 22 வகையான தாங்கு தளங்கள் பற்றியும் விபரங்கள் தருகின்றன.
இந்தியக் கட்டிடக்கலை
இந்தியாவின் பண்பாடு |
---|
இந்தியக் கட்டிடக்கலையின் பற்றியான மிக முந்திய ஆதாரங்கள், சிந்துவெளிப் பண்பாட்டுக் காலத்திலேயே காணப்பட்டது. சிந்துவெளிப் பண்பாட்டுக் காலமென்பது ஏறத்தாழ கி.மு 3500-இலிருந்து கி.மு 2000 வரையிலான காலப்பகுதியாகும். இக்காலகட்டத்தில் இருந்த மொஹெஞ்சதாரோ, ஹரப்பா போன்ற முக்கிய நகரங்களின் அழிபாடுகளிலிருந்து, அக்காலத்தின் கட்டிடக்கலையில் இந்தியர்கள் அடைந்திருந்த உயர் நிலை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால், கி.மு 1500 அளவில் சிந்துவெளிப் பண்பாடு அழிந்த பின்னர், ஏறத்தாழ கி.மு. 500 வரைக்கும் நிலைத்திருக்கும் வகையில் எவ்வித கட்டிடங்களும், கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
வேதகாலக் கட்டிடக்கலை[மூலத்தைத் தொகு]
கி.மு 15 ஆம் நூற்றாண்டளவில் வடமேற்கு எல்லையூடாக இந்தியாவுக்குள் பெருமளவில் நுழைந்த ஆரிய இனத்தவர் நகர வாழ்வுக்குப் பழக்கப்பட்டவர்களாக இருக்கவில்லை. இதனால் போர் வலிமையில் உயர் நிலையில் இருந்தது போலக் கட்டிடக்கலை மற்றும் நகர அமைப்புத் துறைகளில் சிந்துவெளிப் பண்பாட்டு மக்களைப்போல் சிறப்படைந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. இக்காலத்தில் மரம், மூங்கில் என்பவற்றைக் கொண்டே கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கவேண்டும். வேத காலம் என்று பொதுவாக அழைக்கப்படும் இக்காலத்தில் மரத்தினாலான பாதுகாப்பு அரண்களைக் கொண்ட ஊர்கள் அமைக்கப்பட்டிருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பிற்காலத்தில் நிலைத்து நிற்கக்கூடிய பொருட்களால் கட்டிடங்கள் அமைக்கப்பட்டபோதும், மரம், மூங்கில் முதலியவற்றால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் மாதிரிகளையும், அமைப்பு வேலைப்பாடுகளையும் அப்படியே படியெடுத்து அமைத்தார்கள். இதனால் இப்போது நிலைத்திருக்கும் பிற்காலக் கற்கட்டிடங்களை ஆராய்வதின் மூலம் வேத காலத்துக் கட்டிட அமைப்பு முறைகளை ஓரளவுக்கு உய்த்து அறியக்கூடியதாக உள்ளது.
பௌத்த கட்டிடக்கலை[மூலத்தைத் தொகு]
கி.மு 5 ஆம் நூற்றாண்டளவில் கங்கைக் கரையோரமாக மக்கள் குடியேற்றங்களும் பல சிறிய அரசுகளும் உருவாகியிருந்தன. வேதகாலப் பிராமணீயத்துக்கு மாற்றாகப் பௌத்தம், சமணம் என்னும் மதங்கள் தோன்றிச் செல்வாக்குப் பெற்றுவந்தன. அக்காலத்தில் பரந்த பலம் பொருந்திய மௌரியப் பேரரசன் அசோகச் சக்கரவர்த்தியின் ஆட்சியில் கி.மு மூன்றாம் நூற்றாண்டு மத்தியில் பௌத்தம் அரச சமயமாகி இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும், இந்தியாவுக்கு வெளியிலும்கூடப் பரவியபோது, அதன் வலு, செல்வாக்கு என்பன காரணமாக அச்சமயம் சார்பான பல கட்டிடங்களை நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடியதாக அமைக்க முடிந்தது. இக்காலத்தைச் சேர்ந்த கட்டிடக்கலை பொதுவாகப் பௌத்தக் கட்டிடக்கலை என அழைக்கப்படுகின்றது. இக்காலம் கி.மு 250 தொடக்கம் கி.பி 600 களின் முடிவு வரையாகும் என்பது ஆய்வாளர்கள் கருத்து. இக் காலத்தில் உருவான கட்டிடக்கலையே இந்தியப் பாரம்பரியக் கட்டிடக்கலையின் அடிப்படை எனலாம்.
இந்துக் கட்டிடக்கலை[மூலத்தைத் தொகு]
இந்து சமயம், பௌத்தம் தோன்றுவதற்கு முன் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றது எனினும், கி.பி 5 ஆம் நூற்றாண்டு வரை கட்டப்பட்டிருக்கக் கூடிய இந்துக் கட்டிடங்கள் எதுவும் அறியப் படவில்லை. பௌத்த சமயம் இந்தியாவில் வீழ்ச்சியடையத் தொடங்கிய பின்னரே இந்துக் கட்டிடக்கலையின் வேகமான வளர்ச்சி ஆரம்பித்தது எனலாம். இந்துக் கட்டிடக்கலையின் கூறுகள் பலவும் பௌத்த கட்டிடக்கலையில் காணப்பட்டவையே. நிலைத்து நிற்கக்கூடியதாகக் கட்டப்பட்ட இந்துக் கட்டிடக்கலையின் ஆரம்பகாலச் சான்றாதாரங்கள் கி. பி 5 ஆம் நூற்றாண்டிலிருந்தே கிடைக்கத் தொடங்குகின்றன. வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் குப்தப் பேரரசின் கீழும், ஏறத்தாழ இதே காலத்தில் தக்காணத்தில் சாளுக்கிய அரசின் கீழும் ஏற்பட்ட இந்துமத மறுமலர்ச்சி இதற்கு வித்திட்டது எனலாம். தொடக்க கால அமைப்புக்கள் மலைப் பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரை கோயில்களாகவே இருந்தன. ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து இந்துக் கட்டிடக்கலை இரண்டு பிரிவுகளாக வளரத்தொடங்கியது. வடபகுதிப் பாணிக்கு வடஇந்தியக் கட்டிடக்கலைப் பாணி அல்லது நாகர கட்டிடக்கலைப் பாணி என்றும், தென்னிந்தியப் பகுதிகளில் வளர்ந்த பாணிக்கு திராவிடக் கட்டிடக்கலைப் பாணி என்றும் இன்றைய ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர். இதை விடத் தக்காணத்தில் வளர்ந்த ஒரு கலப்புப் பாணி வேசர கட்டிடக்கலைப் பாணி என்று அழைக்கப்படுகின்றது. இந்துக் கட்டிடக்கலையின் முக்கியமான முதலிரு பிரிவுகளும் 13 ஆம் நூற்றாண்டு வரை மிக வேகமான வளர்ச்சியைக் கண்டன.
வடஇந்தியக் கட்டிடக்கலை வட்டார அடிப்படையில் வேறுபாடுகளுடன் வளர்ச்சியடைந்தது. இவை முக்கியமாக ஒரிசா, மத்திய இந்தியா, ராஜபுதனம், குஜராத், தக்காணம் முதலிய வட்டாரங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன. தென்னிந்தியாவில், சிறப்பாகத் தமிழ் நாட்டில் வளர்ந்த திராவிடக் கட்டிடக்கலையும் அரச குலங்களின் ஆட்சிக்கால அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. இவை முத்தரையர் காலம் (கி.பி 600 - 900), சோழர் காலம் (கி.பி 900 - 1150), பாண்டியர் காலம், (கி.பி 1100 - 1350) விஜயநகரக் காலம் (கி.பி 1350 - 1565), நாயக்கர் காலம் (கி.பி 1600 - ) என அழைக்கப்படுகின்றன.
சோழர் கட்டிடக்கலை[மூலத்தைத் தொகு]
சோழர் ஆட்சி தமிழகத்தின் பொற்காலமாய் ஏறத்தாழ நான்கு நூற்றாண்டு காலம் நடைபெற்றது(கி.பி 850-1250). இந்த நீண்ட காலத்தில் தமிழ்நாடு முழுவது சிறியதும் பெரியதுமாகக் கற்கோயில்கள் கட்டப்பெற்று, குமிழ்கள் போல அவை தமிழ்நாட்ட்டின் நிலப்பரப்பை அலங்கரித்தன. அடித்தளம் முதல் உச்சியிலுள்ள கவர்ச்சியான பகுதி வரை(உபாநாதி - ஸ்தூபி பரியந்தம்) கோயில் முழுவதும் கல்லாலேயே கட்டப்படுமாயின், அதற்கு 'கற்றளி' என்பது பெயர். கற்றளிகளைக் கட்டுவதே பெருமைக்குரியதாகக் கருதப்பட்டது. சோழர்களுடைய கட்டடக்கலைப் பாணியைப் பின்பற்றித் தமிழ்நாட்டிற்கு அப்பாலும் பல கோயில்கள் கட்டப்பட்டன. இலங்கையிலும் மைசூரிலும் ஆந்திர மாநிலத்தில் திராக்ஷாராம முதலிய இடங்களிலும் உள்ள கோயில்களைச் சான்றாகச் சொல்லலாம்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில்[மூலத்தைத் தொகு]
தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது இராஜராஜேஸ்சுவரம் கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறத
கங்கைகொண்ட சோழபுரம்[மூலத்தைத் தொகு]
கங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழன் தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.
தாராசுவரம் ஐராவதேஸ்வரர் கோயில்[மூலத்தைத் தொகு]
ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ள ஓர் இந்துக் கோவில் ஆகும். இக்கோவில் இரண்டாம் ராசராசரால் பனிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப் பட்டது.
இஸ்லாமியக் கட்டிடக்கலை[மூலத்தைத் தொகு]
14 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் இஸ்லாமியரின் படையெடுப்பும் அதைத் தொடர்ந்து உருவான இஸ்லாமிய அரசுகளும், வளர்ந்து வந்த அவற்றின் வலிமையும் இஸ்லாமியப் பண்பாட்டை இந்தியாவுக்குள் கொண்டுவந்தன.
வட இந்தியக் கட்டிடக்கலை உருவாக்கம்
ஒரு இணைப்பினூடாக நீங்கள் வந்துள்ள இப் பக்கம் இன்னும் உருவாக்கப்படவில்லை. பக்கத்தை உருவாக்குவதற்குக் கீழேயுள்ள கட்டத்துள் தட்டச்சிடத் தொடங்குங்கள். (மேலதிக விபரங்களுக்கு உதவிப் பக்கங்களைப் பார்க்கவும்). நீங்கள் தவறுதலாக இங்கே வந்திருந்தால், உங்கள் உலாவியின் பின்செல் (back) பொத்தானைச் சொடுக்கவும்முடிக்கப்பட்டது.
No comments:
Post a Comment